ஜேர்மனியில் கருப்பினத்தவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பொலிசார்: ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
ஜேர்மனியில், கருப்பினத்தவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பினத்தவரை சுட்டுக்கொன்ற பொலிசார்
ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Oldenburg நகரத்தில், ஞயிற்றுக்கிழமை அதிகாலை Lorenz A. (21) என்னும் கருப்பின இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை பொலிசார் சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது மரணம் நாடு முழுவதும் கண்டனங்களையும் கோபத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், பொலிசாருக்குள் இனவெறுப்பு காணப்படுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த இளைஞர், இரவு விடுதி ஒன்றிற்கு செல்ல முயன்றபோது அதன் பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுக்க, அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை தெளித்துள்ளார் அவர்.
அதைத் தொடர்ந்து தன்னைத் துரத்தியவர்களை அவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பொலிஸ் கார் ஒன்று அவரைத் துரத்த, அவர் பெப்பர் ஸ்பிரேயுடன் ஆக்ரோஷமாக பொலிசாரை நோக்கி ஓடத் துவங்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உடனே, பொலிசாரில் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அவரை சுட்டுக்கொன்ற பொலிசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |