இனி Part-time வேலை கிடையாது: ஜேர்மன் அரசு திட்டம்
Part-time வேலைக்கு தடை விதிக்க ஆளும் ஜேர்மன் கூட்டணி அரசு திட்டமிட்டுவருகிறது.
அதிக வேலை செய்யமுடிந்தவர்கள் செய்யவேண்டும்
ஜேர்மனியில் ஆளும் கூட்டணியிலுள்ள Christian Democratic Union (CDU) கட்சியின் வர்த்தகப்பிரிவு, Part-time வேலைக்கு தடை விதிக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

Credit : Imago/RHR
அப்பிரிவின் தலைவரான Gitta Connemann என்பவர், அதிக வேலை செய்யமுடிந்தவர்கள், அதிக செய்யவேண்டும் என்கிறார்.
ஏற்கனவே ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும், நாட்டின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, work-life balance எல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட சுழலில்தான் Gitta Connemannம், Part-time வேலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
ஜேர்மன் தலைநகரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரம்: துப்புக் கொடுத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள்
விடயம் என்னென்றால், குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், உடல் நலமற்ற அல்லது வயதான பெற்றோரை, உறவினர்களை கவனித்துக்கொள்வோர் ஆகியோரை இந்த தடை பாதிக்கும்.
ஆனால், அத்தகையோர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று Part-time வேலை செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் Gitta Connemann தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |