ரஷ்ய அச்சுறுத்தல்... பதுங்கு குழி விரிவாக்கத்தை விரைவுபடுத்தும் ஜேர்மனி

Russo-Ukrainian War Russian Federation
By Arbin Jun 08, 2025 12:02 AM GMT
Report

ஜேர்மனி தனது வெடிகுண்டுத் தடுப்பு பதுங்கு குழிகள் மற்றும் தங்குமிடங்களின் தொகுப்பை விரைவாக விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அரசாங்கத்தின் மிக மூத்த சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி தயாராக இல்லை

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் ரஷ்யாவிடமிருந்து வரும் தாக்குதலுக்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ரஷ்ய அச்சுறுத்தல்... பதுங்கு குழி விரிவாக்கத்தை விரைவுபடுத்தும் ஜேர்மனி | Germany Plans Rapid Bunker Expansion

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி போரின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டியிருந்தது, மேலும் அதன் தற்போதைய நிலையில் ஜேர்மனி போதுமான அளவு தயாராக இல்லை என்றும் அரசாங்கத்தின் மிக மூத்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ரால்ஃப் டைஸ்லர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக, போர் ஏற்படும் ஒரு சூழ்நிலை அல்ல என்ற பரவலான நம்பிக்கை ஜேர்மனியில் இருந்தது. அது மாறிவிட்டது. ஐரோப்பாவில் ஒரு பெரிய ஆக்கிரமிப்புப் போரின் அபாயம் குறித்து கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

உக்ரைன் பயன்படுத்திய அந்த மர்ம ஏவுகணை... அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஷ்யா

உக்ரைன் பயன்படுத்திய அந்த மர்ம ஏவுகணை... அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஷ்யா

அப்படியான ஒரு அபாய கட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக 1 மில்லியன் மக்களுக்கான பதுங்கும் இடம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

அதற்காகவே சுரங்கப்பாதைகள், மெட்ரோ நிலையங்கள், நிலத்தடி கேரேஜ்கள், கார் நிறுத்துமிடங்கள் மற்றும் பொது கட்டிடங்களின் பாதாள அறைகளை பாதுகாப்பு தங்குமிடங்களாக மாற்றுதல் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அச்சுறுத்தல்... பதுங்கு குழி விரிவாக்கத்தை விரைவுபடுத்தும் ஜேர்மனி | Germany Plans Rapid Bunker Expansion

2,000 பதுங்கு குழிகள்

மேலும், புதிய பதுங்கு குழி வசதிகளை அரசு நிர்மாணிப்பதை நம்பியிருப்பது போதுமானதல்ல என்றும் கூறும் அவர், தற்போதுள்ள கட்டமைப்புகளை உடனடியாக உருமாற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பு மற்ற நாடுகளில், குறிப்பாக பால்டிக் நாடுகளில் மட்டுமல்லாமல் போலந்து மற்றும் ஜேர்மனியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள சுமார் 2,000 பதுங்கு குழிகள் மற்றும் பனிப்போரில் எஞ்சியிருக்கும் பாதுகாப்பு அறைகளில், சுமார் 580 மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளன, மேலும் பெரும்பாலானவற்றுக்கு பல மில்லியன் யூரோ மதிப்பிலான மறுசீரமைப்புகள் தேவைப்படுகின்றன.

ரஷ்ய அச்சுறுத்தல்... பதுங்கு குழி விரிவாக்கத்தை விரைவுபடுத்தும் ஜேர்மனி | Germany Plans Rapid Bunker Expansion

அவைகளில் சுமார் 480,000 மக்களைப் பாதுகாப்பாக தங்கவைக்க முடியும், இது ஜேர்மன் மக்கள் தொகையில் வெறும் அரை சதவீதம் மட்டுமே. ஒப்பீட்டளவில், பின்லாந்தில் 50,000 பாதுகாப்பு அறைகள் உள்ளன, இது 4.8 மில்லியன் மக்களுக்கு அல்லது அதன் மக்கள் தொகையில் 85% பேருக்கு இடமளிக்கிறது.

ஜேர்மனியை பொறுத்தமட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பு அறைகளுக்கு என 10 பில்லியன் யூரோ செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 30 பில்லியன் யூரோ செலவிட வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US