வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம்
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் பாஸ்போர்ட்டை சில காரணங்களுக்காக ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்கொண்டுவர ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.
என்னென்ன காரணங்கள்?
ஜேர்மனியில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் கட்சிகள், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் குடியுரிமையை சில காரணங்களுக்காக ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்கொண்டுவருவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், யூத எதிர்ப்பாளர்கள் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான தீவிர கருத்துக்கள் கொண்டவர்கள் ஏற்கனவே வேறொரு நாட்டின் குடியுரிமை கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுடைய ஜேர்மன் குடியுரிமையை ரத்து செய்ய அரசியல் சாசனத்தில் இடம் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் ஆராய உள்ளன.
முந்தைய அரசு நீண்ட காலம் விவாதித்து இரட்டைக் குடியுரிமை மற்றும் புதிய குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டுவந்தது.
ஆனால், அடுத்து வரும் அரசு அதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |