ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: விடுத்த எச்சரிக்கை
ஜேர்மனியில் வீடொன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு விரைந்துள்ளார்கள் பொலிசார்.
பொலிசாரை அழைத்த 13 வயது பிள்ளை
ஜேர்மன் நகரமான Wilhelmshavenஇலுள்ள வீடொன்றிலிருந்து பொலிசாரை அழைத்தது அந்த வீட்டிலிருந்த 13 வயது பிள்ளை. அது ஆணா பெண்ணா என்பது குறித்து பொலிசார் தெரிவிக்கவில்லை.

பிள்ளைக்கு ஏதோ ஆபத்து எனக் கருதி பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அந்தப் பிள்ளையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையில், தான் தன் நண்பர்களைப் பார்க்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், தன் பெற்றோர் தன் பஸ் பாஸை பிடுங்கிவைத்துக்கொண்டு தன்னை வெளியே செல்ல அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது அந்தப் பிள்ளை.
எரிச்சலடைந்த பொலிசார், இதுபோன்ற விடயங்களுக்காக அவசர உதவியை அழைக்கவேண்டாம் என எச்சரித்துவிட்டு வந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |