ஜேர்மனி அரசியலில் பரபரப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் விடயம்
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மனி அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது
ஜேர்மனியில், SPD, Alliance 90/The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
இந்நிலையில், கூட்டணிகளுக்குள் கொள்கை கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. ஜேர்மன் அரசில் FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindner நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
அவருக்கும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, திடீரென Christian Lindnerஐ அவரது பதவியிலிருந்து நீக்கியுள்ளார் சேன்ஸலர்.
அதைத் தொடர்ந்து, FDP கட்சி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார் ஷோல்ஸ். அதனால் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் ஒரு நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதனால் ஜேர்மனி அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |