போர் வெடித்தால்... முக்கிய நடவடிக்கை ஒன்றைத் துவக்கிய ஜேர்மனி
ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமிடையில் மோதல் வெடிப்பதற்கான சூழல் அதிகரித்துவரும் நிலையில், போர் தொடர்பில் முக்கிய நடவடிக்கை ஒன்றைத் துவங்கியுள்ளது ஜேர்மனி.
தயாராகும் ஜேர்மன் ராணுவம்
ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமிடையில் மோதல் வெடித்தால், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராகிவருகிறது ஜேர்மனி.
தனது மேற்கத்திய எதிரிகளுடன் போர் செய்ய விரும்பவில்லை என்றே ரஷ்யா கூறிவருகிறது.
ஆனால், அதன் நடவடிக்கைகள் வேறு மாதிரி உள்ளது. சமீபத்தில் ரஷ்ய போர் விமானங்கள் நேட்டோ வான்வெளிக்குள் ஊடுருவிய விடயத்தைப் பார்க்கும்போது ரஷ்யா சொல்வதை நம்பமுடியவில்லை.
ஆக, போர் வெடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆகவே, ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமிடையில் மோதல் வெடித்தால், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராகிவருகிறது ஜேர்மனி.
இதுகுறித்து விவரித்த ஜேர்மன் சர்ஜன் ஜெனரலான ரால்ஃப் ஹாஃப்மேன் (Ralf Hoffmann), நாளொன்றிற்கு காயமடைந்த சுமார் 1,000 போர் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க ஜேர்மனி தயாராகிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில், போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்குமாறு பிரான்சும் தனது மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |