ஜேர்மனியில் இது நீடிக்கும்! சம்பளத்தை கூட்டவேண்டும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
ஜேர்மன் குடிமக்கள் எதிர்கொள்ளும் விலை உயர்வுகள் அடுத்த 10 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்று ஒரு முன்னணி பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.
ஜேர்மனி பரவலான பணவீக்கம் காரணமாக மந்தநிலையை எதிர்கொள்வைத்தால், ஜேர்மன் குடிமக்கள் தற்போது எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வுகள் இன்னும் ஒரு தசாப்த காலம் வரை நீடிக்கும் என்று ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் (DIW) தலைவர் Marcel Fratzscher எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்பே, சீன கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது அரசாங்கத்தின் செலவுகள் மற்றும் ஊரடங்கு கொள்கை போன்ற அரசாங்க முடிவுகளின் காரணமாக, பணவீக்கத்தால் ஏற்படும் விலை உயர்வுகள் உலகளவில் ஜேர்மன் பொருளாதாரத்தை பாதித்துள்ளன.
எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ள ஜேர்மனியின் தற்போதைய பணவீக்க விகிதமானது, பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒன்றிணைந்த போது ஏற்பட்ட பணவீக்க விகிதத்தை விட, மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து பேசிய Marcel Fratzscher, இப்போது பணவீக்கத்தை உயர்த்தும் மையப் பிரச்சினை, நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்த பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம்தான், ஆனால் விலை உயர்வுகள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தொடர்ந்து உயரும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், அரசாங்கம் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) ஏழு சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் மற்றும் அதிகரித்து வரும் ஆற்றல் செலவைக் குறைக்க உதவும் வகையில், வேலை செய்பவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
Fratzscher, பொருளாதார தேக்கநிலையைத் தடுக்க ஊதிய உயர்வுகள் அவசியம் என்று கூறினார், சம்பளம் உயரவில்லை என்றால் "வணிகங்கள் சிக்கலில் மாட்டிவிடும், வேலையின்மை அதிகரிக்கும், பின்னர் நாம் எப்போதும் பலவீனமான வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கத்தின் சுழலுக்குச் செல்வோம்" என்று கூறினார்.