ஜேர்மனியில் சில நொடிகளில் தரைமட்டமான பழமையான பாலம்: வீடியோ காட்சி
ஜேர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளம் கொண்ட ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் வெற்றிகரமாக தகர்க்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜேர்மனியில் தகர்க்கப்பட்ட பழமையான பாலம்
ஜேர்மனியில் லுடென்ஷெய்டில்(Ludenscheid) உள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் மே 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது.
1965ம் ஆண்டு முதல் 1968 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், கடந்த ஆண்டு விரிசல் விழுந்து சேதமடைந்ததை தொடர்ந்து 2021ம் ஆண்டு பாலம் முழுமையாக மூடப்பட்டது.
Germany's Rahmedetal Bridge was demolished in a controlled explosion on Sunday. A crowd of spectators gathered at a good distance to witness the spectacle#Germany #GermanyBridge #ControlledExplosion pic.twitter.com/AT8I7CrnK0
— News18 (@CNNnews18) May 8, 2023
இந்த பாலத்தை முழுமையாக அப்புறப்படுத்த சுமார் 330 பவுண்ட்கள்(150 கிலோ) எடை கொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அருகில் உள்ள சுற்றுப்புறங்களை பாதுகாக்க 50 அடுக்கு தடுப்பு கண்டெய்னர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அருகாமையில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் வீடியோ
வெடி வைக்கப்பட்ட ஓரிரு நொடிகளில் பாலம் முழுவதுமாக தரையில் சரிந்த நிலையில், இதனை அங்கு பாதுகாப்பான இடங்களில் இருந்து பொதுமக்கள் கண்டு கழித்தனர்.
அத்துடன் பாலம் வெடி வைக்கப்பட்டு தகர்ந்து விழுந்த சில நொடிகளை பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், பாலத்தின் இடிபாடுகள் அனைத்தும் ஜூன் 10ம் திகதிக்குள் அகற்றப்படும் என்றும், அடுத்த புதிய பாலம் கட்டி முடிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.