ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய நெருக்கடி ஒரு பக்கம்... சத்தமின்றி சாதித்த ஜேர்மனி
எரிசக்தி பற்றாக்குறை எரிவாயு விலையுயர்வு என அப்பாவி பொதுமக்களும் கடுமையாக பாதிப்பு
அக்டோபர் மாதத்திற்கான ஜேர்மனியின் எரிவாயு தேவையில் 85% சேமிக்கப்பட்டுள்ளதாக உறுதி
ஜேர்மனிக்கு ரஷ்யாவில் இருந்து எரிவாயு வழங்கிவரும் Nord Stream 1 திட்டமானது பராமரிப்பு காரணங்களால் முடக்கப்பட்ட போதும் ஜேர்மனி சத்தமில்லாமல் சாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவுக்கான முக்கிய எரிவாயு வழங்கலை முன்னெடுக்கும் Nord Stream 1 திட்டமானது ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகளை பழிவாங்கும் பொருட்டு பராமரிப்பு பணிகள் முன்னெடுக்க இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
@reuters
இதனால் பல ஐரோப்பிய நாடுகள் குளிர் காலத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ளது. மட்டுமின்றி, எரிசக்தி பற்றாக்குறை எரிவாயு விலையுயர்வு என அப்பாவி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ஜேர்மனியின் எரிவாயு தேவையில் 85% சேமிக்கப்பட்டுள்ளதாக உறுதியான தரவுகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட ஜேர்மனி தங்கள் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்வைத்த கோரிக்கையானது அதன் பலனைப் பெற்றுள்ளதாக இதனால் தெரிய வந்துள்ளது.
@Bloomberg
ரஷ்ய எரிவாயு இறக்குமதியை குறைக்கும் பொருட்டு பயன்பாட்டை கட்டுப்படுத்த ஜேர்மனி பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பயனாகவே, தற்போது 85.02% எரிவாயு சேமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் தான் எரிவாயு சேமிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு ஜேர்மனி கோரிக்கை விடுத்திருந்தது.
தொழிற்சாலைகளின் எரிவாயு பயன்பாட்டானது ஜூலை மாதம் 21% சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ளது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.