குரங்கம்மை தொற்று ஆபத்து., தடுப்பூசி போட பரிந்துரைக்கும் ஜேர்மன் தடுப்பூசி ஆணையம்
ஜேர்மனியில் குரங்கம்மை தொற்று ஆபத்தில் உள்ள பெரியவர்களுக்கு தடுப்பூசி ஒன்றை ஜேர்மன் தடுப்பூசி ஆணையம் பரிந்துரைக்கிறது.
ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனைக் குழு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குரங்கம்மை (Monkeypox) தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் அல்லது அதிக ஆபத்தில் உள்ளவர்கள் பவேரியன் நோர்டிக் (Bavarian Nordic) நிறுவனத்தின் இம்வானெக்ஸ் (Imvanex) தடுப்பூசியைப் பெற பரிந்துரைத்துள்ளது.
குரங்கம்மை தொற்றின் அதிக ஆபத்தில் உள்ளவர்களில், பல ஆண் கூட்டாளிகளுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் தொற்று நோய் ஆய்வக பணியாளர்கள் உள்ளனர் என்று STIKO என அழைக்கப்படும் குழு தெரிவித்துள்ளது.
பெரியம்மை தடுப்பூசியான Imvanex முதலில் 14 நாட்களில் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்று STIKO கூறியது.
இதற்கு முன் பெரியம்மை தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு குறைந்தது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும், அதே சமயம் பெரியம்மை தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஒரு டோஸ் போதும் என்று ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு தடுப்பூசிக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குழு கூறியது.
ஜேர்மனியில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.