ஜேர்மனியில் சிவப்பு எச்சரிக்கை! தாக்குதல்களுக்கு தயாராகி வரும் ஹேக்கர்கள்
ஜேர்மனியில் ஹேக்கர்கள் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஆபத்து மிக உயர்ந்த அளவு இருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க்கில் உள்ள பல சர்வர்களை அச்சுறுத்தும் மென்பொருள் பாதிப்பு குறித்து தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகத்தின் (BSI) தலைவர் Arne Schönbohm மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி Horst Seehofer சமீபத்தில் இணைய தாக்குதல்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தனர்.
BSI-ன் படி, கடந்த ஆண்டு 144 மில்லியன் புதிய மால்வேர் (malware) வகைகள் கண்டறியப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாகும்.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த சிவப்பு எச்சரிக்கை, உலகம் முழுவதும் சைபர் கிரைமினல்களின் தாக்குதல்களின் பெருக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அவற்றில் சில தாக்குதல்கள் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் "தற்போது எழுந்துள்ள அச்சுறுத்தலின் அளவை முழுமையாக மதிப்பிட முடியாது" என BSI கூறுகிறது.