உக்ரைனுக்கான ராணுவ உபகரண மையத்தை மாற்ற ஜேர்மானிய அரசு முடிவு
உக்ரைனின் ஆயுதப்படைகளுக்கான ராணுவ உபகரணங்கள் புதுப்பிக்கும் மையத்தை ஸ்லோவாக்கியாவில் இருந்து ஜேர்மனிக்கு மாற்ற ஜேர்மானிய அரசு முடிவு செய்துள்ளது.
சில அரசியல் காரணங்கள் மற்றும் ஸ்லோவாக்கியாவின் தற்போதைய அணுகுமுறையின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு இறுதியில் ஸ்லோவாக்கியாவில் அமைக்கப்பட்ட இந்த உபகரண புதுப்பிப்பு மையம், உக்ரைனின் ராணுவத்திற்கும் ஐரோப்பிய பாதுகாப்புத் திட்டத்திற்கும் மிக முக்கியமானது.
இந்த உபகரண புதுப்பிப்பு மையம், உக்ரைனின் எல்லைக்கு அருகில் அமைந்திருந்ததால் தளவாட (Logistics) சிக்கல்களை தவிர்க்க முடிந்தது.
இந்த மையத்தில் தான் Panzerhaubitze 2000 (PzH 2000) howitzers, Dingo கவச வாகனங்கள், MARS II ரொக்கெட் துப்பாக்கி அமைப்புகள் மற்றும் Gepard anti-aircraft guns, உள்ளிட்ட முக்கிய ஜேர்மன் உபகரணங்கள் இங்கு புதுப்பிக்கப்பட்டன.
ஸ்லோவாக்கியாவின் அணுகுமுறையில் மாற்றம்
உக்ரைன்-ரஷ்யா போரின் ஆரம்ப மாதங்களில் ஸ்லோவாக்கியா உக்ரைனுக்கு மிகுந்த உதவியளித்தது.
ஆனால் 2023 செப்டம்பர் மாதம், ஸ்மெர் SD கட்சி தேர்தலில் வெற்றி பெற்றபின், புதிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ உக்ரைனுக்கான உதவிகளை குறைக்க முடிவு செய்தார்.
மையத்தின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டன, இதனால் ஜேர்மனி இம்முடிவை எடுத்துள்ளது.
மையம் ஜேர்மனிக்கு மாற்றம்
31 டிசம்பர் 2024-க்குள் ஜேர்மனியில் புதிய மையம் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோப்பிய சுங்க விதிகள் மற்றும் அரசியல் கருத்துவாதங்களின் காரணமாக இந்த மாற்றம் தேவைப்பட்டதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் உக்ரைனின் ராணுவ உபகரணங்களுக்கு சில தளவாட சிக்கல்களை உருவாக்கலாம், ஆனால் உக்ரைனின் தேவைகளை தொடர்ச்சியாக பூர்த்தி செய்ய ஜேர்மனி உறுதி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany relocates Ukrainian army equipment hub amid tensions, Germany, Armed Forces of Ukraine, Slovakia, Germany's slovakia army equipment hub