ஜேர்மனியில் Omicron வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர்?
ஜேர்மனியில், சுமார் 3,200 பேர், Omicron வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே, ஜேர்மனியில் 810 பேர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக The Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
Omicron வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் 3198 பேரில், 48 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
The Robert Koch நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, Omicron வகை கொரோனா வைரஸ், 15 முதல் 34 வயதுள்ளவர்களையே அடிக்கடி தாக்குவதாகவும், அந்த வயதினரில் சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 34 முதல் 59 வயது வரையுள்ளவர்களில் 1,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள், Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அந்த நபர் 60 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைபட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.