ரஷ்ய விளையாட்டு வீராங்கனைக்கு ஜேர்மனியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பு
ஜேர்மனியில் நடைபெறும் தடகளப்போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விளையாட்டு வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு

ஜேர்மனியில் நடைபெற்றுவரும் தடகளப்போட்டிகளில், ஏஞ்சலினா (Angelina Melnikova, 25) என்னும் ரஷ்ய தடகள வீராங்கனை, TSV Tittmoning-Chemnitz என்னும் ஜேர்மன் விளையாட்டுக் குழு சார்பில் கலந்துகொள்வதாக இருந்தது.
NEW: Pro-Putin Russian gymnast Angelina Melnikova will NOT perform for Chemnitz at this weekend's Bundesliga finals.
— Jonathan Crane (@jonathancrane5) November 24, 2025
Asked by DW if Melnikova would compete, club coach Tatjana Bachmayer replied: "No, she will not."
Bachmayer said she'd comment further once the finals were over. pic.twitter.com/U4qf2tQRJt
ஆனால், ஏஞ்சலினா அந்த போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என பயிற்சியாளரான Tatjana Bachmayer தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
ஏஞ்சலினா, புடின் ஆதரவாளர் என அறியப்படுபவர் ஆவார். இருந்தும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்தில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை ஆதரிக்கும் வகையிலான அடையாளமான ’Z’ அடையாளத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார் ஏஞ்சலினா.
அது விதி மீறலாகும். ஆகவேதான் ஜேர்மனியில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கேற்க இருந்த ஏஞ்சலினா, இனி விளையாட அனுமதிக்கப்படமாட்டார் என பயிற்சியாளரான Tatjana Bachmayer தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |