தைவானை ஊடுருவினால்... சீனாவுக்கு ஜேர்மனியின் வெளிப்படையான செய்தி!
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சீனா சென்றுள்ள நிலையில், தைவான் குறித்த சில வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சீனா தைவானை ஊடுருவினால் உலகமே அதிரும்
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock சீனா சென்றுள்ள நிலையில், சீனா தைவானை ஊடுருவினால் உலக நாடுகளில் அது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
image credit:kyiv post
தைவானில் ஒரு இராணுவ முரண்பாடு என்பது பயங்கரமான ஒரு விடயமாக அமையும் என்று கூறியுள்ள Annalena, அது ஜேர்மனியை நேரடியாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சரான Qin Gangஐ சந்தித்தபின் பேசிய Annalena, சீனாவுக்கும் தைவானுக்குமிடையே சண்டை ஏற்படுமானால், அது உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
அந்த இராணுவ முரண்பாட்டால் ஏற்படும் ஒரு நிலையற்ற சூழல், அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய Annalena, உலக பொருளாதாரம், ஏன் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கூட அது பாதிக்கும் என்று கூறியுள்ளார்.