ஜேர்மனியை உலுக்கும் கொரோனா! ஒரே நாளில் 384 பேர் பலி.. 80,000ஐ கடந்த பாதிப்பு
ஜேர்மனியில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
புதன்கிழமை ஜேர்மனியில் புதிததாக 80,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் நவம்பர் 26ம் திகதி 76,000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,661,811 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், புதன்கிழமை கொரோனா தொற்றுக்கு 364 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் ஜேர்மனியில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,735 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவின் மற்ற சில பகுதிகளை விட குறைவான தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட ஜேர்மன் மக்கள்தொகையில் தீவிரமாக பரவக்கூடிய ஒமிக்ரான் மாறுபாடு பரவிவருவதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் மக்கள் தொகையில் 75% க்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.