பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீதான விவாதம், அடுத்த மாதம், அதாவது, நவம்பரில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
விவாதம் நடைபெற உள்ள திகதி
ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஆகத்து மாதம் கேபினட்டில் நடைபெற்ற நிலையில், இரட்டைக் குடியுரிமைச் சட்டம் மீதான விவாதம், நவம்பர் 9 அல்லது 10 ஆம் திகதி ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருபவரான SPD கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Hakan Demir கூறும்போது, பெடரல் உள்துறை அமைச்சக தகவல்களின்படி, ஜேர்மன் குடியுரிமை பெறுதலும், இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படுவதும், அடுத்த ஆண்டு இளவேனிற்காலத்தில் சாத்தியமாகிவிடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |