ட்ரம்புடன் மோதக்கூடாது... ஜேர்மனியின் வருங்கால தலைவர்
ஜேர்மனியின் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அரசியல்வாதி ஒருவர், நாம் ட்ரம்புடன் மோதக்கூடாது என்று கூறியுள்ளார்.
ட்ரம்புடன் மோதக்கூடாது...
ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் CDU கட்சியின் தலைவரான Friedrich Merz, நாம் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார்.
கனடா, மெக்சிகோ, சீனா முதலான நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள விடயம், பல நாடுகளில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் CDU கட்சியின் தலைவரான Friedrich Merzஇடம், ட்ரம்ப் வரி விதிப்பதாக மிரட்டி வரும் விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.
ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல என்று கூறிய Merz, ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு முன் இதேபோல ஐரோப்பிய ஸ்டீல் மற்றும் அலுமியம் மீது வரிகள் விதிக்க முடிவு செய்தார்.
பதிலுக்கு ஐரோப்பாவும் வரிகள் விதிக்க முடிவு செய்தது. ஆனால், பின்னர் இருதரப்பும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து ஆறு வராங்களுக்குப் பிறகு அந்த வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.
ஆகவே, என்னைப் பொருத்தவரை நாம் அமெரிக்காவுடனான வர்த்தகப்போரில் ஈடுபடக்கூடாது என்கிறார் Merz.
ட்ரம்ப் துவங்கியுள்ள பிரச்சினையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கவேண்டும். அப்படி பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மனியும் தயாராக இருக்கிறது என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |