ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசு முடிவு! வெளியான முக்கிய அறிவிப்பு
ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதாவது, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் ஜேர்மனியில் ஒரு மணிநேரத்திற்கான ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்த முடிவுசெய்துள்ளதாக ஜேர்மன் தொழிலாளர் அமைச்சர் Hubertus Heil தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 12 யூரோவாக உயர்த்துவது, அதிபர் Olaf Scholz மற்றும் அவரது சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் ஜேர்மனியின் தேசியப் பொருளாதாரம் உண்மையில் நீண்ட காலத்திற்கு அதிக உற்பத்தித் திறன் பெறுவதற்கு வழிவகுக்கிறது என Heil கூறினார்.
இந்த மாற்றத்தின் மூலம் குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஊழியர்கள் மற்றும் பாரம்பரியமாக மிகக் குறைந்த ஊதியம் உள்ள சேவைத் தொழில்களில் பணிபுரியும் பெண்கள் பயனடைய வேண்டும்.
ஊதிய உயர்வு மசோதாவை வெள்ளிக்கிழமையன்று மற்ற அமைச்சரவைக்கு அனுப்பியதை உறுதிப்படுத்திய Heil, மேலும் சமூக ஜனநாயகக் கட்சியின் கூட்டணி கட்சிகள் இதை எதிர்க்கமாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சரவையில் இந்த மசோதா குறித்து விவாதிப்போம்.
பின்னர், ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும், எனவே அக்டோபர் 1ம் திகதி குறைந்தபட்ச ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்தப்படும் என Heil கூறினார்.