ஜேர்மனியின் உயரமான மனிதர்: சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள்
ஜேர்மனியில் வாழும் அந்த நபர் அடிக்கடி தலையை குனிந்தபடி நடக்கிறார், அவரால் காருக்குள் உட்கார முடியவில்லை, ஆனால், மக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள போட்டி போடுகிறார்கள்.
காரணம்...
ஜேர்மனியின் உயரமான மனிதர் என அழைக்கப்படும் Jannik Könecke, 2.25 மீற்றர், அதாவது 7 அடி 3 அங்குல உயரமுடையவராக இருக்கிறார்.
அவரைப் பார்ப்பவர்கள் எல்லாரும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள விரும்பினாலும், அவர் அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்தித்துவருகிறார்.
சாதாரண உயரமுள்ள வீட்டுக் கதவுகள் வழியாக குனியாமல் அவரால் நுழையமுடியாது. சாதாரண கார் ஒன்றிற்குள் அவரால் உட்கார முடியாது. அவருடைய அளவுள்ள சட்டையோ, செருப்போ எளிதாக கிடைப்பதில்லை.
என்ன வேலை செய்கிறார் அவர்?
சமூக ஊடகங்கள், குறிப்பாக டிக்டாக் மூலம்தான் அவருக்கு வருமானம் வருகிறதாம்.
அதிகமாக பாலும் தயிரும் சாப்பிடுபவர்கள் உயரமாக வளருவார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன. Jannikம் சின்ன பிள்ளையாக இருக்கும்போதே 24 கப் தயிரும், 12 லிற்றர் பாலும் குடிப்பாராம். Jannikஇன் பெற்றோரும் உயரமானவர்கள்தானாம், ஆனாலும், அவர்கள் 2 மீற்றரை தாண்டவில்லை.
பொதுவாக இதுபோல் உயரமாக இருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், Jannik முறையாக உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடல் நிலையை நன்றாக கவனித்துக்கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |