வரலாறு காணாத அளவில் ஜேர்மனிக்கு வருகை புரிந்த சுற்றுலாப்பயணிகள்
2024ஆம் ஆண்டில், பொருளாதார பிரச்சினைகள் நிலவிய நிலையிலும், ஜேர்மனிக்கு வரலாறு காணாத அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.
வரலாறு காணாத அளவிலான சுற்றுலாப்பயணிகள்
2019ஆம் ஆண்டில், அதாவது, கொரோனா காலகட்டத்துக்கு முன் ஜேர்மனிக்கு வருகை புரிந்த சுற்றுலாப்பயணிகளைக் காட்டிலும், 2024இல் ஜேர்மனிக்கு சுற்றுலா வந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக, ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 433 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனியில் ஒரு இரவாவது தங்கியுள்ளார்கள் என்கின்றன தரவுகள்.
ஐரோப்பிய சுற்றுலாவின் பிரபலமான மாதமான ஆகத்து மாதத்தில் மட்டுமே, இந்த ஆண்டில், 59 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஜேர்மனியில் தங்கியுள்ளார்கள்.
2019இல், ஆகத்து மாதத்தில் ஜேர்மனியில் தங்கிய சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை, 58.8 மில்லியன் ஆகும். ஆக, இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |