கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு இனி இதற்கெல்லாம் அனுமதி கிடையாது... ஜேர்மனி எடுக்க இருக்கும் நடவடிக்கைகள்
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு தடைகள் பல விதிக்கப்பட உள்ளன.
அதன்படி, இனி தடுப்பூசி பெறாதவர்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், கலாசார மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படும் என ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மட்டுமே இனி மேற்கூறப்பட்ட இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம் துவக்கப்பட உள்ளதுடன், அதை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் சட்டமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மெர்க்கல் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியா பிப்ரவரி முதல் கொரோனா தடுப்பூசியை கட்டயாமாக்க உள்ளதுடன், கிரீஸும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோக, ஜேர்மனியில் மேலும் பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.
அவையாவன,
- தடுப்பூசி பெறாத இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களிலானாலும், தனிப்பட்ட இடங்களிலானாலும் சந்தித்துக்கொண்டால், அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே சந்தித்துக்கொள்ள அனுமதி.
- அதிக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் இரவு விடுதிகள் மூடப்படும்
- பள்ளி மாணவமாணவியர் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்
- திறந்தவெளி விளையாட்டுக்களைக் காண, மைதானத்தில் அதிகபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி
- புத்தாண்டுக்கான பட்டாசு விற்பனைகளுக்குத் தடை.
இந்த கட்டுப்பாடுகள் எப்போது அமுல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால், அவை கிறிஸ்துமஸ் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிரது.
ஜேர்மனியில் ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதைக் காட்டும் எண் சற்றே குறைந்துள்ளது என்றாலும், அது நேற்றைய நிலவரப்படி 439.2 ஆகத்தான் உள்ளது.
ஜேர்மனியில், நேற்று ஒரு நாளில் மட்டுமே, 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,209 ஆகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022