ஜேர்மனியில் முடிவுக்கு வரும் தேசிய அவசர நிலை: புதிதாக பதவியேற்க உள்ள அரசின் கருத்து
ஜேர்மனியில் கொரோனா அவரசர நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து, அடுத்து அமையவிருக்கும் அரசின் பிரதிநிதிகள் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி, ஜேர்மனியில் கொரோனா தொடர்பிலான சிறப்புக் கட்டுப்பாடுகள், நவம்பர் 25-ஆம் திகதியுடன் முடிவுக்கு வர உள்ளன.
ஜேர்மனியில் அடுத்து SPD, FDP மற்றும் கிரீன்ஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளை துவக்கியுள்ளன.
முதலில் அவர்கள் பேச்சுவார்த்தைக்காக எடுத்துக்கொண்ட பிரச்சினைகளில் ஒன்று கொரோனா.
கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் நவம்பர் 25ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தாலும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் வகையில் தொற்றுநோய் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு சட்டத்திருத்தம் செய்யலாம் என அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
எங்களைப் பொருத்தவரை பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம், ஊரடங்கு முதலான விடயங்கள் நமக்கு ஒத்துவராது. அவை இப்போதைக்கு தேவையும் இல்லை என்கிறார் SPD கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான Dirk Wies.