பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஒரு நாட்டுடனான எல்லையை மூடும் ஜேர்மனி
பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்துகொள்வதாகக் கூறி, ஜேர்மனி ஆஸ்திரியாவுடனான எல்லைகளை மூட முடிவு செய்துள்ளது.
CSU கட்சியின் பொதுச்செயலாளரான Markus Blume, தங்கள் அண்டை நாடான ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்துகொள்வதால், அதனுடனான எல்லைகளை மூட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று ஆஸ்திரியா பொதுமுடக்க விதிகளை தளர்த்தியதால்தான் ஜேர்மனி இந்த முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எங்கள் பார்வையில், கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொதுமுடக்க விதிகளை தளர்த்தியது பொறுப்பற்ற செயல் என்றார் Markus Blume.
இப்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா அலை, எல்லை வழியாக ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார் அவர்.
ஆகவேதான், இப்போது எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததும் நன்மை பயக்கக்கூடியதான ஒன்றுமாகிறது என்றார் அவர்.