ஜேர்மனி முழுவதும் மாணவ மாணவியர் திடீர் வேலைநிறுத்தம்: கோபப் பின்னணி
Students strike across Germany in protest against military service: ராணுவ சேவை தொடர்பில் ஜேர்மனி முழுவதும் மாணவ மாணவியர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஜேர்மனி முழுவதும் மாணவ மாணவியர் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
திடீர் வேலைநிறுத்தம்
ராணுவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜேர்மனி முழுவதும் மாணவ மாணவியர் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அவ்வகையில், ஜனவரி மாதம், தன்னார்வலர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுவது தொடர்பில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
என்றாலும், நிலைமை மோசமானால், அல்லது, வெகு சிலரே தாமாக முன்வந்து ராணுவத்தில் இணையும் பட்சத்தில், ஜேர்மன் நாடாளுமன்றம் ராணுவ சேவையை கட்டாயமாக்ககூடும்.
கோபப் பின்னணி
விடயம் என்னவென்றால், ஜேர்மனியிலுள்ள அனைத்து இளைஞர்கள், இளம்பெண்களுக்கும், அவர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக உள்ளார்களா என்பதை அறியும் நோக்கில் கேள்வித்தாள் ஒன்று அனுப்பபட்டுள்ளது.
அப்படி ராணுவத்தில் சேர தங்களுக்கு ஆர்வம் உள்ளது என தெரிவிக்கும் இளைஞர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்நிலையில், வடக்கு ஜேர்மனி நகரங்களான Kiel மற்றும் Flensburg நகரங்களில் உள்ள இளைஞர்கள், ராணுவத்தில் சேர தங்களுக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ள நிலையிலும், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆக, இந்த விடயம் இளைஞர்களை கோபமடையச் செய்துள்ளது. ஆகவேதான் ஜேர்மனி முழுவதும் மாணவ மாணவியர் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.