ஜேர்மனியில் சர்க்கரை குளிர்பானங்களுக்கு வரி விதிக்க திட்டம்
ஜேர்மன் அரசு, 2028 முதல் இனிப்பு பானங்களுக்கு (Sugary Drinks) சிறப்பு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் அதிக உடல் எடை (Obesity) பிரச்சினையை குறைப்பதற்கும், சுகாதார அமைப்பின் மீது உள்ள அழுத்தத்தை தணிப்பதற்கும் இந்த வரி திட்டம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் யூரோ வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த தொகை நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
ஆனால், ஜேர்மன் சர்க்கரை தொழில் சங்கம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “சர்க்கரை விலை உயர்த்துவது எந்த நாட்டிலும் அதிக உடல் எடை பிரச்சினையை குறைக்கவில்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு (WHO) அடுத்த 10 ஆண்டுகளில் இனிப்பு பானங்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை 50 சதவீதம் உயர்த்தும் வகையில் வரி விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Germany #SugaryDrinks #HealthReform #Obesity #PublicHealth #WHO #BreakingNews