அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஜேர்மனி: எந்த விடயத்தில் தெரியுமா?
ஜேர்மனி, ராணுவத்துக்கான வெடிமருந்து தயாரிப்பில் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஜேர்மனி
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின்போது, அதற்கு சரியான வகையில் அமெரிக்கா உதவி செய்யாததால், நாளை நம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும் அமெரிக்கா நமக்கு உதவி செய்யாது என்ற எண்ணம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகியுள்ளது.
ஆகவே, தங்கள் ராணுவங்களை பலப்படுத்தும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.

அவ்வகையில், ஜேர்மனி தனது ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை துவக்கியுள்ள நிலையில், 2039வாக்கில் ஐரோப்பாவிலேயே வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக ஜேர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராணுவத்துக்கான வெடிமருந்து தயாரிப்பில், ஜேர்மனி அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான Rheinmetall நிறுவனம், ராணுவ ட்ரக், தோட்டாக்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் தயாரிப்பு, கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |