கடைசி நிமிடங்களில் கோல் அடித்து ஜேர்மனியை காப்பாற்றிய வீரர்! Round of 16க்குள் நுழைந்த அணிகள்
ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான யூரோ 2024 போட்டி டிராவில் முடிந்தது.
மிரட்டலாக கோல்
Deutsche Bank Park மைதானத்தில் நடந்த போட்டியில் ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் ராபர்ட் ஆன்ரிக் (Robert Andrich) அபாரமாக கோல் அடித்தார்.
ஆனால், VAR பரிசோதனை செய்தபோது ஜேர்மனியின் ஜமல் முசியாலாவின் (Jamal Musiala) கையில் பந்து பட்டு வந்தது தெரிய வந்தது. இதனால் ஜேர்மனிக்கு கோல் வழங்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, 28வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் டேன் நோயே (Dan Ndoye) மிரட்டலாக கோல் அடித்தார். இதற்கு முதல் பாதியில் ஜேர்மனி அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
50வது நிமிடத்தில் முசியாலா அடித்த On Goal ஷாட்டை சுவிஸ் (Swiss) கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். அதன் பின்னர் ஜேர்மனியின் கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஆஃப்சைடு கோல்
84வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ரூபன் வார்காஸ் (Ruben Vargas) கோல் அடித்தார். அந்த கோல் ஆஃப்சைடு என்று அறிவிக்கப்பட்டது.
அடுத்த 4 நிமிடங்களில் (88) சுவிஸ் அணித்தலைவர் ஸ்ஹாகா அடித்த ஷாட்டை ஜேர்மனி கோல்கீப்பர் (அணித்தலைவர் ) நியூயர் அந்தரத்தில் பறந்து தடுத்தார்.
90 நிமிடங்கள் வரை ஜேர்மனி (Germany) கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 90+2வது நிமிடத்தில் ஜேர்மனியின் டேவிட் ராயும் (David Raum) கிராஸ் செய்த பந்தை நிக்லஸ் ஃபுல்கிரக் (Niclas Fullkrug) ஹெட்டர் அடித்து கோலாக மாற்றினார்.
இதன்மூலம் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. மேலும் 3 புள்ளிகளைப் பெற்ற ஜேர்மனியும், குழுவில் இரண்டாம் இடம் பிடித்த சுவிட்சர்லாந்து Round of 16 சுற்றுக்குள் நுழைந்தன.
அதேபோல் ஸ்பெயின், போர்த்துக்கல் அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.