புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய ஜேர்மனி: இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல்
ஜேர்மனி, தன் நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஆப்கன் நாட்டவர்களான ஒரு குடும்பத்தினரை போலந்துக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையில் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.
சட்ட விரோதமாக ஜேர்மனிக்குள் நுழைந்த குடும்பம்
கடந்த வெள்ளியன்று, ஐந்து பேர் அடங்கிய ஆப்கன் குடும்பம் ஒன்று, தாங்கள் புகலிடம் கோரியிருந்த போலந்து நாட்டிலிருந்து ஜேர்மன் எல்லையைக் கடந்து ஜேர்மனிக்குள் நுழைந்துள்ளது. அவர்களிடம் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவர்களை ஜேர்மன் அதிகாரிகள் மீண்டும் போலந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டதாக ஒரு செய்தி வெளியானது.
‼️?Przywiezienie i pozostawienie przez niemiecką Policję cudzoziemców w Polsce (Osinów Dolny) odbyło się z naruszeniem zasad współpracy obu służb i prawa regulującego kwestie przekazywania osób. Służby niemieckie nie mogą arbitralnie podejmować takich decyzji. pic.twitter.com/O7wcEGd0dg
— Straż Graniczna (@Straz_Graniczna) June 17, 2024
உடனடியாக போலந்து நாடு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஜேர்மன் பொலிசார் வெளிநாட்டவர்களை போலந்துக்கு திருப்பி அனுப்பியது இருநாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக் கொள்கைகளையும், இடமாற்ற சட்டத்தையும் மீறும் செயலாகும். இப்படி ஜேர்மன் அதிகாரிகள் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
போலந்து பிரதமர் கோபம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலந்து பிரதமரான Donald Tusk, தான் இந்த ஏற்றுக்கொள்ள இயலாத சம்பவம் தொடர்பாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுடன் விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், போலந்து உள்துறை அமைச்சரான Tomasz Siemoniak மற்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser ஆகியோரும் இந்த விடயம் குறித்து விவாதிக்க இருப்பதாக போலந்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் அதிகாரிகள் அந்த ஆப்கன் குடும்பத்தை போலந்துக்குள் திருப்பி அனுப்புவதன் நோக்கம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என போலந்து அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அந்த ஆப்கன் குடும்பத்தினரை போலந்து அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக தாங்கள் போலந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும், பல மணி நேரத்திற்கு போலந்து தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால், அந்த குடும்பத்தை போலந்து எல்லைக்குள் அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள் ஜேர்மன் அதிகாரிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |