ஜேர்மனியில் பல்வேறு துறைகளுக்கு ஏராளம் பணியாளர்கள் தேவை

Germany
By Balamanuvelan Jul 27, 2022 10:04 AM GMT
Report

கனரக தொழில்துறை முதல் மருத்துவத்துறை வரை, ஜேர்மனியில் பல்வேறு துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.

உணவகங்களுக்குச் சென்றால் மேசைகள் காலியாக இருக்கிறதே என சென்று உட்கார்ந்தால், உணவு தயாரிக்கவோ, பரிமாறவோ அங்கு ஆட்கள் இல்லை.

உணவகத் துறை மட்டுமில்லை, ரயில்களும் விமானங்களும் காலதாமதமாக வருகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன. காரணம், பணியாளர்கள் தட்டுப்பாடு. இப்படி, 56 சதவிகித நிறுவனங்கள் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளன.

148 வகை பணியிடங்களில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக ஜேர்மன் பெடரல் வேலைவாய்ப்பு ஏஜன்சி தெரிவிக்கிறது. 122 வகை பணியிடங்கள் ஆட்கள் இல்லாததால் அபாய நிலையில் உள்ளன. ஒரு முதியோர் இல்லத்தில் பணியிடங்களை நிரப்ப எட்டு மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. கட்டுமான நிறுவனங்களோ ஆறு மாதங்கள் காத்திருக்கவேண்டும். நாடு முழுவதும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஜேர்மனியில் பல்வேறு துறைகளுக்கு ஏராளம் பணியாளர்கள் தேவை | Germany There Is A Huge Demand For Workers

@Sabine Kinkartz/DW

கனடா போன்ற மற்ற நாடுகளைப்போலவே, ஏராளமானோர் ஓய்வு பெறுகிறார்கள், ஓய்வு பெற இருக்கிறார்கள், அந்த காலியிடங்களை நிரப்ப ஆட்கள் இல்லை.

ஆண்டொன்றிற்கு ஜேர்மனிக்கு 400,000 பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக 2020ஆம் ஆண்டு ஜேர்மனி சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு, வெறும் 30,000 பேர்தான் பணிக்கு வந்தார்கள்.

ஜேர்மனியில் பல்வேறு துறைகளுக்கு ஏராளம் பணியாளர்கள் தேவை | Germany There Is A Huge Demand For Workers

@Michael Bihmaer /HROMORANGE/Picture Alliance

ஆக, இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருந்தும், போதுமான பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதிலிருந்து அந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்பது நன்கு புலனாகிறது. அத்துடன் புகலிட விதிகளில் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்கிறார்கள் பணி வழங்குவோர்.

புலம்பெயர்வோர் எளிதில் நாட்டுக்கு வந்து பணிகளைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் இப்போதிருக்கும் விதிகளை மாற்றினால்தான் ஜேர்மனியில் பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினை சீராக வாய்ப்புள்ளது எனலாம். அப்போது தகுதியுடையோர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தாங்களும் பலன் பெறலாம், ஜேர்மனியின் பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினையும் தீரும்.  

ஜேர்மனியில் பல்வேறு துறைகளுக்கு ஏராளம் பணியாளர்கள் தேவை | Germany There Is A Huge Demand For Workers

@Christoph Schmidt/ Dpa/ Picture Alliance


மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US