ஜேர்மனி காப்பாற்ற போராடிய திமிங்கலம்: ஒரு துயரச் செய்தி
ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலமான டிம்மி உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மானியர்களின் மனம் கவர்ந்த திமிங்கலம்
மார்ச் மாதம், ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்தனர்.

ஜேர்மன் ஊடகங்கள் அதற்கு டிம்மி என பெயர் வைக்க, அதை எப்படியாவது கடலின் ஆழமான பகுதிக்குள் அனுப்பிவிட ஏராளமானோர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.
இரண்டு பெரும் ஜேர்மன் கோடீஸ்வரர்கள் அந்த திமிங்கலத்தை கடலுக்குள் அனுப்பும் முயற்சிக்கான பணத்தை வழங்க, barge என்னும் ஒரு பெரிய தட்டையான படகில் நீர் நிரப்பி, அதன் மூலம் டிம்மி திமிங்கலத்தை கடலின் ஆழமான பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், டென்மார்க் கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கிடந்தது சமீபத்தில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, அது டிம்மியா என்பதை அறிவதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அந்த திமிங்கலம் தென்பட்ட இடத்துக்குச் சென்றார்கள்.
இந்நிலையில், அது டிம்மிதான் என்பதை டென்மார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜன்சி உறுதி செய்துள்ளது.
டென்மார்க் நீச்சல் வீரர்கள், இறந்துகிடக்கும் டிம்மியை புகைப்படம் எடுத்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |