ஜேர்மனியில் '2G' விதிமுறை நடைமுறைப்படுத்த வாய்ப்பு! வலுக்கும் ஆதரவு
ஜேர்மனியில் அதிகரித்துவரும் கோவிட்-19 தொற்றை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் '2G' விதிமுறையை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
தடுப்பூசி போடாதவர்களுக்கு தேசிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ஜேர்மன் அரசுக்கு கோரிக்கை அழைப்புகள் வலுத்து வருகின்றன.
பல முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் மருத்துவர்கள் ஜேர்மனி முழுவதும் '2G' நுழைவுத் தேவைகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை அதிகப்படுத்திவருகின்றனர்.
"தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்க எங்களுக்கு இப்போது தெளிவான விதிகள் தேவை" என்று ஜேர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவரான கிளாஸ் ரெய்ன்ஹார்ட் (Klaus Reinhardt) சனிக்கிழமையன்று பத்திரிக்கையில் கூறினார்.
"உதாரணமாக, உணவகங்கள், நிகழ்வுகள் அல்லது சினிமாக்களுக்கான வருகைகள் இப்போது குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
SPD சுகாதார நிபுணர் Karl Lauterbach, தடுப்பூசி போடப்பட்ட (geimpft) மற்றும் மீட்கப்பட்ட (genesen) நபர்களை மட்டுமே அனுமதிக்கும் '2G' விதி, "மளிகைக் கடைகள் அல்லது மருந்துக் கடைகள் போன்ற அன்றாடத் தேவைகளை பெரும் இடங்களைத் தவிர, தேவையில்லாத அனைத்துப் பகுதிகளிலும் அமலுக்கு வர வேண்டும்" என்றார்.
ஜேர்மனியின் அண்டை நாடான ஆஸ்திரியா வெள்ளிக்கிழமை நாடு தழுவிய 2G விதியை அறிவித்ததைத் தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைக்கான அழைப்புகள் ஜேர்மனியல் வந்துள்ளன.
அந்நாட்டில், தடுப்பூசிகள் இல்லாத ஆஸ்திரியர்கள் இனி மதுக்கடைகள் அல்லது சிகையலங்கார கதைகளுக்குள் நுழையவோ அல்லது வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல் ஜேர்மனியில், Saxony மாநிலத்தில் கூட திங்கள்கிழமை முதல் சில பகுதிகளில் 2G விதியை அமுல்படுத்தப்படுகிறது.
அங்கு, குணமடைந்த மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே உட்புற உணவகங்கள், கிளப்புகள் மற்றும் ஓய்வு மற்றும் கலாச்சார வசதிகளை அணுக முடியும். ஸ்டேடியங்களில் விளையாட்டு போன்ற முக்கிய நிகழ்வுகளும் பாதிக்கப்படுகின்றன, ஆனால் சில்லறை விற்பனை நிலையங்கள் அல்லது மத சேவைகள் பாதிப்பும் இல்லை.
இந்நிலையில், ஜேர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவர் Klaus Reinhardt மற்றும் அரசியல்வாதிகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் பொதுமுடக்கம் கொண்டுவருவதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ஒரு படி மேலாக சென்ற பவேரிய தலைவர் Markus Söder, பணியிடங்களில் '3G' விதிமுறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது தடுப்பூசி போடப்படாதவர்கள் தங்கள் பணியிடத்திற்குள் நுழைவதற்கு எதிர்மறையான சோதனை அறிக்கை தேவைப்படும்.
"ஊழியர்கள் தடுப்பூசி போட்டார்களா அல்லது பரிசோதனை செய்தார்களா என்று கேட்க முதலாளிகளுக்கு உரிமை இருக்க வேண்டும்" என்று சோடர் கூறினார்.