வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஜேர்மனி
Germany to crack down on worker exploitation: வெளிநாட்டுப்பணியாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க ஜேர்மனி திட்டமிட்டுவருகிறது.
ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு, அந்நாடு வெளிநாட்டுப் பணியாளர்களையே நம்பியுள்ளது.
வெளிநாட்டுப்பணியாளர்கள் தொடர்பில் முடிவுகள்
அதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜேர்மனிக்கு பணியாளர்கள் வேலைக்கு வருவதை எளிதாக்கும் வகையில் விதிகளும் நடைமுறையில் உள்ளன.
விடயம் என்னவென்றால், அப்படி ஜேர்மனிக்கு வேலைக்கு வரும் பணியாளர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது, ஏமாற்றி அரசின் உதவிகளைப் பெறும் விடயங்களும் நடக்கின்றன.

ஆக, இப்படி வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏமாற்றப்படுவதையும், அவர்கள் பெயரால் மோசடிகள் நடப்பதையும் தடுக்க அரசு திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் தொழிலாளர் துறை அமைச்சரான Baerbel Bas தெரிவித்துள்ளார்.
அதன்படி, பணியாளர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் ஏஜன்சிகளுக்கிடையில் தரவுகள் பகிரப்படுவதை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க உள்ளார்கள்.
அத்துடன், ஏமாற்றும் பணி வழங்குவோரை தங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்கவும், அரசு உதவிகள் தவறான நபர்களைச் சென்றடைவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.