சொந்த ராணுவ பயன்பாட்டிற்கு முன்பே புதிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு அள்ளிக்கொடுக்கும் ஜேர்மனி
ஜேர்மனி அதன் சொந்த ராணுவம் பயன்படுத்துவதற்கு முன்பே புதிய ஏவுகணை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.
ஜேர்மனி, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவாக 100 IRIS-T வழிகாட்டி ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
NATO-வின் Ukraine Defense Contact Group (UDCG) கூட்டத்திற்குப் பிறகு, ஜேர்மன் தூதரகம் அதன் X சமூக வலைதளத்தில் இதை உறுதிப்படுத்தியது.
50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற UDCG கூட்டத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பயிற்சி உதவி வழங்கும் உறுதிமொழி அறிவிக்கப்பட்டது.
ஜேர்மனி இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் 100 IRIS-T ஏவுகணைகளை விரைவில் அனுப்ப உறுதியளித்துள்ளது.
இதற்கு முன், ஜேர்மனி உக்ரைனுக்கு 6 IRIS-T SLM மற்றும் 5 IRIS-T SLS பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது.
IRIS-T அமைப்புகள், ஜேர்மனியின் Bundeswehr (ஜேர்மன் ராணுவம்) உத்தியோகப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு முன்பே உக்ரைனுக்கு வழங்கப்பட்டன.
ஜேர்மனி கடந்த ஜனவரி 14 அன்று புதிய இராணுவ உதவித்தொகுப்பை அறிவித்ததன் தொடர்ச்சியாக, இந்த ஏவுகணைகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
German iris-t Missile, Germany Ukraine