Fast-track குடியுரிமை திட்டம் ரத்து: ஜேர்மனி முடிவு
வெளிநாட்டவர்கள் விரைவாகக் குடியுரிமை பெற உதவும் Fast-track குடியுரிமை திட்டத்தை ரத்து செய்துள்ளது ஜேர்மனி.
Fast-track குடியுரிமை திட்டம் ரத்து
ஜேர்மனியில் தற்போது ஆட்சி செய்யும் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸின் கட்சி, தேர்தல் பிரச்சாரத்தின்போதே Fast-track குடியுரிமை திட்டம் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது.
தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில், தற்போது Fast-track குடியுரிமை திட்டத்தை ரத்து செய்துள்ளது ஜேர்மன் நாடாளுமன்றம்.
இந்த Fast-track குடியுரிமை திட்டம் என்பது, ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியுடன் நன்கு ஒருங்கிணைந்து வாழும் நிலையில், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதிலாக, மூன்று ஆண்டுகளிலேயே ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உதவும் திட்டமாகும்.
உலக நாடுகள் பலவற்றில் சமீப காலமாக புலம்பெயர்தலுக்கு எதிரான உணர்வு மேலோங்கி நிற்கும் நிலையில், ஜேர்மன் அரசியல்வாதிகளும் அதே நிலையில்தான் காணப்படுகிறார்கள்.
ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் டோப்ரின்ட், ஜேர்மன் பாஸ்போர்ட் என்பது, ஒருவர் வெற்றிகரமாக ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழும் நடைமுறைக்கான அங்கீகாரமாக இருக்க வேண்டும், அது, சட்டவிரோத புலம்பெயர்தலை ஊக்குவிக்கும் ஒரு விடயமாக இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |