இராணுவ தளங்களுக்கு அருகில் வரும் ட்ரோன்களை தகர்க்க ஜேர்மனி திட்டம்
ஜேர்மன் இராணுவ தளங்களுக்கு அருகில் வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனி அரசாங்கம், ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய தள அமைப்புகளுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக பறக்கும் ஆளில்லா விமானங்களை (Drones) உடனடியாக தகர்க்க உரிமை வழங்கும் விதமாக ஜேர்மன் இராணுவத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்ய ஜனாதிபதி புடின் போரைத் தொடங்கியதற்குப் பின்னர், ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஜேர்மன் காவல்துறைக்கு சவாலாக மாறியுள்ளதாக உள்துறை அமைச்சர் நான்சி ஃபய்சர் தெரிவித்தார்.
ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் ஆதரவிற்கு எதிராக ஒரு நிழல் போர் நடத்துகிறதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சமீபத்திய சந்தேக நிகழ்வுகள்
மஞ்சிங் மற்றும் நியூபர்க் அன் டேர் டோனாவுக்கு அருகிலுள்ள ராணுவ தளங்களில் அடிக்கடி ட்ரோன்கள் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம்ஸ்டெயின் அமெரிக்க விமான தளம் மற்றும் வடக்கு கடல் அருகிலுள்ள தொழிற்துறை மண்டலங்களிலும் ட்ரோன்கள் கண்டறியப்பட்டன.
புதிய சட்ட முன்மொழிவுகள்
தற்போது, ஜேர்மன் இராணுவம் ட்ரோன்களை தடுக்க காவல்துறைக்கு உதவுவதற்கே அதிகாரம் உள்ளது.
ஆனால் புதிய சட்டத் திட்டங்கள் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால், ராணுவ தளங்களுக்கு அல்லது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவற்றைத் தகர்க்க இராணுவத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.
இந்த புதிய நடவடிக்கை, ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |