இதை மட்டும் செய்யாவிட்டால், ஜேர்மனி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்! எச்சரிக்கை செய்தி
ஜேர்மனியில் இன்னும் 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியடையும் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழக்கும் நிலைமையை சந்திக்கும் என அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியாகியுள்ளது.
டெலாய்ட் (Deloitte) என்ற ஆலோசனை சேவை நிறுவனம், மாதிரி அடிப்படையிலான சூழ்நிலை பகுப்பாய்வுகளைப் (model-based scenario analyses) பயன்படுத்தி, CO2 உமிழ்வைக் கொண்டிருக்கவில்லை என்றால் ஏற்படும் பொருளாதார விளைவுகளையும், CO2 நடுநிலை பொருளாதாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும், இந்த நிறுவனம் ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'பசுமைப் பொருளாதாரத்தை' ஏற்கத் தவறினால், ஜேர்மனி 2070-க்குள் 730 பில்லியன் யூரோக்கள் மற்றும் கிட்டத்தட்ட அரை மில்லியன் வேலைகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: By Cezary Piwowarski
அதாவது காலநிலை மாற்றம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளில் 730 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான காலநிலை மாற்றம் தொடர்பான சேதத்தை ஜேர்மன் பொருளாதாரம் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
'Germany’s Turning Point: Accelerating New Growth on the Path to Net Zero' என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கை, சரிபார்க்கப்படாத CO2 உமிழ்வுகள் மற்றும் உயரும் வெப்பநிலைகள் 2070-ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும் என்று கணித்துள்ளது.
இதன் விளைவாக 470,000 வேலைகள் வரை இழப்பது உட்பட கடுமையான பொருளாதார சேதம் ஏற்படும்.
வரும் நாட்களில் ஜேர்மனி தனது பொருளாதாரத்தை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தால் கணிசமான பொருளாதார நன்மைகள் இருக்கும். மேலும் 2050-ஆம் ஆண்டில் காலநிலை-நடுநிலையாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.