செயற்கை ஒளிச்சேர்க்கை: ஜேர்மன் ஆய்வாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு
உலகம் இன்று சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புவி வெப்பமயமாதல். குளிர் காலத்தில் பனி உறைந்து காணப்படும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் பனி காணாமல் போனதற்கும், பனிப்பாறைகள் உருகி ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த புவி வெப்பமயமாதல்தான் காரணம்.
ஆக, இந்த புவி வெப்பமயமாதலைக் குறைக்க, சமூக ஆர்வலர்கள் ஒருபக்கம் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, ஆய்வாளர்கள் பலர் நடைமுறையில் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
செயற்கை ஒளிச்சேர்க்கை
இந்த புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு என்னும் வாயுவும் ஒரு காரணமாகும்.
பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகள் சுவாசிக்கும்போதும், தாவரங்கள் மட்கும்போதும் இந்த கார்பன் டை ஆக்சைடு வெளியாகும்.
அந்த கார்பன் டை ஆக்சைடை, தாவரங்கள் எடுத்து உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தும். அந்த நிகழ்வே ஒளிச்சேர்க்கை என அழைக்கப்படுகிறது.
ஆனால், மனிதன் பயன்படுத்தும் வாகனங்கள், இயந்திரங்கள், ஆடம்பர பொருட்கள் ஆகியவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, தாவரங்களால் முழுமையாக பயன்படுத்தப்படும் அளவை தாண்டிவிட்டது.
கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்த, முதலில் தாவரங்கள் வேண்டும். அவற்றைத்தான் நாம் அழித்து கட்டிடங்களாக்கிவருகிறோமே. அப்புறம் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை இருக்கிற மரங்களால் பயன்படுத்தமுடியும்!
ஆகவே, இந்த கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்திலிருந்து அகற்ற ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
அவ்வகையில், ஜேர்மன் ஆய்வாளரான Kira Rehfeld, செயற்கை ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வின் மூலம் இந்த கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்திலிருந்து அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஜேர்மனியின் Tübingen நகரில் உள்ள Geo and Environmental Center என்னும் மையத்தில், Kira தலைமையிலான ஆய்வாளர்கள் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை, கருவிகள் மூலமும், வினையூக்கிகள் மற்றும் சூரிய ஆற்றல் மூலமும், திட கார்பனாக மாற்றும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.
அவரது ஆய்வு முழுமையாக வெற்றி பெறுமானால், புவி வெப்பமயமாதலைக் குறைப்பதில் அது பெரும் உதவியாக இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |