புதிய வகை படைப்பிரிவை உருவாக்கும் ஜேர்மனி: உக்ரைன் போர் கற்றுக்கொடுத்த பாடம்
Germany to set up first drone regiment: ஜேர்மன் ராணுவத்தில் ட்ரோன் படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
ரஷ்ய உக்ரைன் போர் துவங்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னமும் போர் நீடிக்கிறது என்றால் அதற்கொரு முக்கிய காரணம் உள்ளது.

அது, ட்ரோன்கள், ரோபோக்கள் போன்ற விடயங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆளில்லாத ஆயுத தாக்குதல்!
இந்நிலையில், ஜேர்மனியும் ட்ரோன்களுக்கெனவே தனியாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
புதிய வகை படைப்பிரிவு ஒன்றை உருவாக்கும் ஜேர்மனி
ஆம், 2027ஆம் ஆண்டு, தன் ராணுவத்தில் ட்ரோன் படைப்பிரிவு ஒன்றை இணைக்கும் முயற்சிகளைத் துவங்க உள்ளது ஜேர்மனி.

அந்தப் படைப்பிரிவுக்காக, முதலில் 300 முதல் 350 பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். பின்னர், அந்த எண்ணிக்கை 600ஆக உயர்த்தப்படும்.
அந்தப் படைப்பிரிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, ஆளில்லா தரைவழி வாகனங்கள், மின்னணுப் போர் மற்றும் எதிரி நாட்டிலிருந்து ஏவப்படும் ட்ரோன்களை எதிர்த்து தாக்கும் அமைப்புகளையும் கவனித்துக்கொள்ளும்.
2029வாக்கில் ஜேர்மனியின் ட்ரோன் படைப்பிரிவு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.