ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் எக்கச்சக்கமான ஜேர்மானியர்கள்
ஜேர்மனியில், ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
விடயம் என்னவென்றால், இப்படி ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்துள்ள சுற்றுலாப்பயணிகளில் அதிகம் பேர் வெளிநாட்டவர்கள் அல்ல, ஜேர்மன் நாட்டவர்கள்!
ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் ஜேர்மானியர்கள்
2025 ஆம் ஆண்டில், சுற்றுலா செல்வதற்காக, ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்த சுற்றுலாப்பயணிகள் 68.3 மில்லியன் பேர்.

அவர்களில் 48.5 மில்லியன் பேரும் ஜேர்மன் மக்கள்தான். 19.8 மில்லியன் பேர்தான் வெளிநாட்டவர்கள்.
என்றாலும், சுற்றுலாவைப் பொருத்தவரை, அது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, ஹொட்டல்கள் முதலான விருந்தோம்பல் துறைக்கு அதனால் நன்மையே என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |