இரத்த காயங்களுடன் ஒரு கிலோமீற்றர் ஓடிவந்து உதவி கேட்ட சிறுமி; ஜேர்மனியில் நடந்த பயங்கர சம்பவம்
ஜேர்மனியில் 6 பேர் சென்ற கார் ஒன்று பயங்கர விபத்துக்கு உள்ளாகி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தப்பிப்பிழைத்த சிறுமி ஒருவர் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை ஓடி உதவி கேட்டத்தியடுத்து, மற்ற சிறுவர்கள் உயிருடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜேர்மனியின் Prignitz மாவட்டத்தில் Triglitz அருகே சனிக்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை மாலை 17 வயதான சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி, சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
Photo: 7aktuell.de/Alexander Bergenroth
தகவலின்படி, காயமடைந்த சிறுமிகளில் ஒருவர் Triglitz-க்கு ஒரு கிலோமீட்டர் சுற்றி ஓடி, அங்கு தனது நாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்த 51 வயதான ஒருவரை சந்தித்து உதவிகேட்டார். பின்னர் அந்த நபர் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்களை வரவழைத்தார்.
இந்த விபத்து குறித்து கூறிய பொலிஸார், காரை ஓட்டிவந்த சாரதியிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை, கார் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த வாகனம் எப்படி எப்படி அவர் கைக்கு வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
Photo: Christian Guttmann / dpa
மேலும், காரில் மது போத்தல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டியவர் மது அருந்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, இது குறித்து நச்சுயியல் அறிக்கையின் மூலம் மட்டுமே தெளிவுபடுத்தப்படும் என தெரிவித்தனர்.
மீட்புப் பணியாளர்கள் 17 வயது மற்றும் 15 வயது சிறுவர்கள் விபத்தல் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டனர்.
மீதமுள்ள 18 வயது ஆண் மற்றும் 14, 16 மற்றும் 17 வயதான மூன்று சிறுமிகள் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்.Photo: 7aktuell.de/Alexander Bergenroth