ஜேர்மனி-உக்ரைன் இணைந்து நடத்திய ஆயுத ரோபோ வாகன சோதனை வெற்றி
Germany, Ukraine test armed battle robot: ஜேர்மனி-உக்ரைன் இணைந்து ஆயுதம் பொருத்தப்பட்ட ரோபோ வாகனத்தை சோதனை செய்துள்ளன.
ஆயுதம் பொருத்தப்பட்ட தரை ரோபோ
ஜேர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு நிறுவனங்கள் இணைந்து, முன்னணி போர்க்களத்தில் பயன்படுத்த ஆயுதம் பொருத்தப்பட்ட தரை ரோபோ வாகனத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன.

இந்த திட்டம் ஜேர்மனியின் ARX Robotics மற்றும் உக்ரைனின் ROBONEERS நிறுவனங்களின் கூட்டாண்மையில் உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஜேர்மன் சேன்சலர் Friedrich Merz கீவ் நகரத்திற்கு சென்றபோது, உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
GEREON எனப்படும் இந்த ரோபோ வாகனம், கமெரா மற்றும் சென்சார்கள் மூலம் கண்காணிப்பு செய்யும் திறன் கொண்டது. இதற்கு SABER எனப்படும் ஆயுத மாட்யூல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தூரத்திலிருந்து பாதுகாப்பாக தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஆயுதம் இல்லாத பதிப்புகள் ஏற்கனவே உக்ரைனில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பொருட்களை கொண்டு செல்லுதல், காயமடைந்தவர்களை வெளியேற்றுதல், ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள், மின்னணு போர்துறை ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த ரோபோ வாகனத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு முன்னணி பணிகளுக்குத் தகுந்த வகையில் விரைவாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரே தளத்தை உருவாக்குவதாகும். SABER மாட்யூல் தனிப்பயனாக்கத்திற்கும் ஏற்றது. அதில் துப்பாக்கி முதல் குண்டுவீச்சு கருவிகள் வரை பொருத்த முடியும்.
ARX Robotics நிறுவனம், GEREON வாகனங்கள் தற்போது உக்ரைனில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய மேற்கு நாடுகளின் தரை ரோபோ படையென தெரிவித்துள்ளது.
ROBONEERS நிறுவனம், 2014 முதல் 15,000-க்கும் மேற்பட்ட முன்னணி பணிகளில் தங்கள் ரோபோ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் Rys Pro எனப்படும் மற்றொரு ரோபோ வாகனத்தை ஜேர்மனி மற்றும் உக்ரைனில் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளன. முதல் ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, உக்ரைன் பாதுகாப்பு படைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை அதிகரிக்கும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |