ஜேர்மனியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியது
ஜேர்மனியில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியுள்ளதாக ஜேர்மன் ஃபெடரல் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை
ஒரு பக்கம், ஜேர்மனியில் நிறைய வேலை இருக்கிறது, வெளிநாட்டவர்கள் வந்தால் நல்ல வேலை கிடைக்கும் என விளம்பரங்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால், ஜேர்மனியில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும், 1.1 மில்லியன் ஜேர்மானியர்கள் அரசு உதவி பெற்று வாழ்ந்துவருவதாகவும் ஜேர்மன் ஃபெடரல் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது பருவம் சார்ந்த (seasonal) வேலையின்மை என ஜேர்மன் ஃபெடரல் வேலைவாய்ப்பு வாரிய உறுப்பினரான டேனியல் (Daniel Terzenbach) என்பவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜேர்மனியில், தொழிற்பயிற்சிகள் (apprenticeships) கோடையில்தான் முடிவடையும்.
அதேபோல, தொழில் நிறுவனங்கள் கோடையின்போது வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை, கோடை விடுமுறைக்குப் பின்தான் அவர்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள்.
ஆக, இந்த வேலையின்மை தற்காலிகமானதுதான் என்கிறது ஜேர்மன் ஃபெடரல் வேலைவாய்ப்பு அலுவலகம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |