விண்வெளிப் போர்களுக்கு தயாராகும் ஜேர்மனி - புதிய பாதுகாப்பு திட்டம்
ஜேர்மனி தனது முதல் தேசிய விண்வெளி பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அமைச்சரவை, வலுவான மற்றும் தடுக்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
விண்வெளியில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசாங்கத்தின் பொறுப்பான நடத்தையை ஊக்குவிப்பதி இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயற்கைக்கோள் வலையமைப்புகளை விரிவுபடுத்துவதையும், கூட்டுப் பணிகளை மேற்கொள்வதையும் வலியுறுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி, 2030-க்குள் விண்வெளி திட்டங்களுக்கு 35 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஜேர்மனி தனது விண்வெளி திறனை சுயமாகவும், ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் NATO உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படும் வகையிலும் மேம்படுத்த விரும்புகிறது.
செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி உள்கட்டமைப்புகள் எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என அரசு வலியுறுத்துகிறது.
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிட்டு, விண்வெளி பாதுகாப்பு திட்டம் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை, ஜேர்மனியின் பாதுகாப்பு துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் மூலம், நாடு தனது பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதோடு, சர்வதேச கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany space security strategy, Germany satellite defense plan, Friedrich Merz space policy, Boris Pistorius defense investment, 35 billion euro space projects 2030, NATO space cooperation Germany, Germany orbital safety initiative, European allies space defense, Germany deterrent satellite system, Germany national space security news