அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்திற்கு பாதுகாப்பு இல்லை- மீட்க வலியுறுத்தும் ஜேர்மன் எம்.பி.க்கள்
அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தை மீட்க வேண்டும் என ஜேர்மன் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜேர்மனியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காவின் Federal Reserve வால்ட்களில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கையிருப்புகள் இனி பாதுகாப்பாக இருக்காது எனக் கூறி, அவற்றை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஜேர்மனியின் மொத்த 3,350 டன் தங்கக் கையிருப்பில் சுமார் 1,236 டன் அமெரிக்காவில் சேமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் Bundesbank ஆராய்ச்சி தலைவர் எமானுவேல் மோன்ச், “தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையில், அமெரிக்காவில் தங்கத்தை வைத்திருப்பது அபாயகரமானது. ஜேர்மனி தனது தங்கத்தை மீட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

European Taxpayers Association தலைவர் மைக்கேல் ஜேகர், “ட்ரம்ப் எப்போதும் வருவாய் ஈட்டுவதற்காக எதிர்பாராத முடிவுகளை எடுக்கிறார். அதனால் நம் தங்கம் பாதுகாப்பாக இல்லை” எனக் கூறியுள்ளார்.
அதேபோல், Green Party செய்தித்தொடர்பாளர் கத்தரினா பெக், தங்கக் கையிருப்புகள் “நம்பிக்கையின் அடித்தளம்” எனக் குறிப்பிட்டு, அவை அரசியல் சண்டைகளில் பலியாகக் கூடாது எனக் கூறியுள்ளார்.
ஆனால், ஆளும் Christian Democratic Union (CDU) கட்சி, தங்கத்தை மீட்கும் திட்டத்தை எதிர்த்து வருகிறது.
Bundesbank தலைவர் Joachim Nagel, “அமெரிக்க மத்திய வங்கி நம்பகமான கூட்டாளி. நம் தங்கம் பாதுகாப்பாக உள்ளது” என உறுதியளித்துள்ளார்.
2013 முதல் 2020 வரை, ஜேர்மனி ஏற்கனவே 300 டன் தங்கத்தை நியூயார்க் மற்றும் 374 டன் தங்கத்தை பாரிஸ் வால்ட்களில் இருந்து பிராங்க்பர்டுக்கு மீட்டுள்ளது.
இருப்பினும், ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின், ஜேர்மனியில் தங்கக் கையிருப்புகள் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம், ஜேர்மனி-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கி, ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany gold repatriation 2026, German lawmakers US Fed gold, Bundesbank gold reserves debate, US Federal Reserve gold vaults, Germany sovereign gold safety, Trump impact on German gold, Germany gold in New York vaults, Gold reserves repatriation news, German economists gold concerns, Germany US relations gold issue