திறமையான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - ஜேர்மனி அழைப்பு
அமெரிக்காவின் H-1B விசா சர்ச்சைக்கு மத்தியில், திறமையான இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா H-1B விசா கட்டணத்தை 100,000 டொலராக உயர்த்தியத்தைத் தொடர்ந்து, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரும் குழப்பத்திழும் பயத்திலும் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஜேர்மனி இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது.
ஜேர்மனியின் இந்திய தூதுவர் பிலிப் அகெர்மன், உயர்தர திறமைகள் கொண்ட இந்தியர்கள் ஜேர்மனிக்கு வரவேற்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், "ஜேர்மனியின் குடிவரவு கொள்களைகள் நம்பகமானவை, நேர்தியானவை. IT, மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புக்கள் உள்ளன.
ஜேர்மனியில் வேலை செய்யும் இந்தியர்கள், சராசரி ஜேர்மன் குடிமக்களை விட அதிக சம்பளம் பெறுகிறார்கள். இது அவர்களின் சமூக பங்களிப்பை காட்டுகிறது." என கூறியுள்ளார்.
Here is my call to all highly skilled Indians.
— Dr Philipp Ackermann (@AmbAckermann) September 23, 2025
Germany stands out with its stable migration policies, and with great job opportunities for Indians in IT, management, science and tech.
Find your way to Germany to boost your career: https://t.co/u5CmmrHtoF pic.twitter.com/HYiwX2iwME
அமெரிக்காவின் புதிய கட்டண உத்தரவு காரணமாக, பல இந்தியர்கள் தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்து அமெரிக்காவிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முயற்சிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜேர்மனியின் இந்த வரவேற்பு இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany welcomes Indians, Indian techies, Germany India, H-1B visa chaos, Job Opportunities in Germany, Job Opportunities for Indians