ஜேர்மனியிலும் பரவத் துவங்கியது காட்டுத்தீ
ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் காட்டுத்தீ பரவத் துவங்கியுள்ள நிலையில், சுமார் 1,800 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
உலக நாடுகள் சிலவற்றில் வெப்பம் காரணமாக காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், ஜேர்மன் வனப்பகுதி ஒன்றிலும் காட்டுத்தீ பரவத் துவங்கியுள்ளது.
ஜேர்மனியிலும் பரவத் துவங்கிய காட்டுத்தீ
ஜேர்மனி, பெல்ஜியம் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது Eifel வனப்பகுதி. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில் அமைந்துள்ள அந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள Gey என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.

தீயை அணைக்கும் மற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளின்போது, மீட்புக்குழுவினரில் நான்கு பேருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், பொதுமக்களில் முதியவர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டதாகவும் உள்ளூர் அரசியல்வாதியான Christian Nolten என்பவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட, வெடிக்காத குண்டுகள் பல அப்பகுதியில் பரவலாக காணப்படுவது தீயணைப்பு வீரர்களுக்கு கூடுதல் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தீ எப்படி உருவானது, பொதுமக்கள் யாராவது தங்களுக்கே தெரியாமல் தீ பரவ காரணமாக இருந்துவிட்டார்களா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |