பிரித்தானியாவின் தோல்வியடைந்த திட்டத்தை ஜேர்மனி ஏற்கப்போவதில்லை: லண்டனில் ஜேர்மன் தூதர் திட்டவட்டம்
பிரித்தானியாவின் தோல்வியடைந்த ருவாண்டா நாடுகடத்தல் திட்டத்தை ஜேர்மனி ஏற்றுக்கொள்வதாக இல்லை என ஜேர்மனியின் லண்டன் தூதர் மிகேல் பெர்கர் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் முந்தைய பழமைவாத அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ருவாண்டா நாடுகடத்தல் திட்டத்தை ஏற்க தனது நாடு பரிசீலித்து வருவதாக கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரித்தானியாவின் சர்ச்சையான இந்த திட்டம் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இது ஜேர்மனியின் தெளிவான நிலைப்பாடாகும்.
இத்திட்டத்தின் அடிப்படையில், பிரித்தானியாவில் சரணடைந்த புலம்பெயர்ந்தவர்கள், அவர்களின் விசாரணை முடியும் வரை ருவாண்டாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஆனால், பல்வேறு உரிமைகள் அமைப்புகள், நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த திட்டம், பிரித்தானியாவில் இன்றுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
ஜேர்மனி ருவாண்டா போன்ற நாடுகளுடன் இது போன்ற புலம்பெயர்வு தொடர்பான ஒப்பந்தங்களை தங்கள் அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியாக தெரிவித்தார்.
இதற்கு மாற்றாக, ஜேர்மனியின் புலம்பெயர்வு கொள்கை மனிதாபிமானத்திற்கும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்க செயல்படும் எனவும் அவர் கூறினார்.
ஜேர்மனியின் இந்த நிலைப்பாடு, பிரித்தானியாவின் ருவாண்டா திட்டத்தை மையமாக வைத்து, மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே மாதிரியான திட்டங்களை ஏற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany is not adopting UK's failed Rwanda plan, Rwanda deportation scheme, UK Rwanda deportation scheme