அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள்: ஜேர்மனியின் நிலைப்பாடு
German Defense Minister says, Germany would continue to cooperate with the Trump administration: ஜேர்மனி, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் என்று ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துவிட்டது என்றே கூறலாம்.
காரணம், ஜனநாயகக் கட்சி, பெறும்பான்மை பெற எத்தனை இருக்கைகளைக் கைப்பற்றவேண்டுமோ, அத்தனை இருக்கைகளையும் பெற்றுவிட்டது.
ஆக, ட்ரம்பின் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அது குறித்து நேரடியாக இல்லாவிட்டாலும், ஏதாவது ஒருவகையில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

ஜேர்மனியின் கருத்து
அமெரிக்க இடைத்தேர்தல்கள் குறித்து ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் பேசும்போது, 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினரின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவில் நிர்வாகம் மாறவில்லை என்பதை குறிப்பிட்டுள்ள பிஸ்டோரியஸ், ஜேர்மனி அரசு, ட்ரம்ப் அரசுடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது, அது குறித்து இவ்வளவு சீக்கிரம் அறிந்துகொள்ள இயலாது என்றும் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.